தடைகளை தாண்டி திருமணம் செய்யும் 3 அடி உயர பாடகர்
14 வைகாசி 2024 செவ்வாய் 09:27 | பார்வைகள் : 4089
தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அபுரோசிக். 20 வயதாகும் இவர் 3 அடி உயரம் கொண்டவர். சமூக வலைதளங்களில் பிரபலமான இவர் பாடகராகவும் திகழ்கிறார்.
இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர் சல்மான்கான், ஏ.ஆர்.ரஹ்மான், டோனி என பிரபலங்களுடன் நட்பாக பழகி அவர்களுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. தடைகளை எல்லாம் தகர்த்து எப்போதும் சிரித்த முகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வலம் வரும் இவர் தற்போது தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி அமிரா என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.
சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஜூலை 7-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.
அவர் அமிராவுக்கு இதய வடிவிலான வைர மோதிரத்தை நிச்சயதார்த்தின் போது அணிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan