Paristamil Navigation Paristamil advert login

கனடாவில்  காட்டுத் தீ  பரவும் அபாயம் - ஐந்து மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில்  காட்டுத் தீ  பரவும் அபாயம் - ஐந்து மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

14 வைகாசி 2024 செவ்வாய் 07:57 | பார்வைகள் : 6427


கனடாவின் ஐந்து மாகாணங்கள் மற்றும் ஒர் பிராந்தியத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம் மாசடைவு குறித்து இவ்வாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் மேற்குப் பகுதியில் நிலவி வரும் காட்டுத் தீ பரவுகை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பேர்ட்டா, சஸ்கற்றுவான், ஒன்றாரியோ, கியூபெக் மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியத்திலும் காற்றின் தரம் மாசடைதல் குறத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் காட்டுத் தீ பரவுகை பருவ காலம் ஆரம்பமாகியுள்ளது.


கனடவில் தற்பொழுது சுமார் 90 இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளதாகவும் இதில் 12 இடங்களில் நிலவி வரும் காட்டுத் தீயானது கட்டுக்கு அடங்காதவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்