அதிக மின்னல் தாக்குதல்கள் பதிவான நாளா மாறிய ஞாயிற்றுக்கிழமை!

13 வைகாசி 2024 திங்கள் 11:15 | பார்வைகள் : 8830
இவ்வருடத்தின் அதிகபட்ச மின்னல் தாக்குதல்கள் பதிவான நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 12) பதிவானது.
கிட்டத்தட்ட 10,000 மின்னல் தாக்குதல்கள் பிரான்சில் பதிவாகின. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பலத்த மின்னல் தாக்குதல்களும், இடியுடன் கூடிய பலத்த மழையும் பதிவானது.
நேற்றைய நாளில் ஈஃபிள் கோபுரத்திலும் மின்னல் தாக்குதல்கள் பதிவானது.
மழை காரணமாக தீயணைப்பு படையினர் மொத்தமாக 248 மீட்புப்பணிகளை மேற்கொண்டிருந்தனர். நேற்று இரண்டு மணிநேரங்களில் 56 மில்லிமீற்றர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் (Météo France) அறிவித்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025