வவுனியாவில் மதுபான சாலை மோதலில் ஒருவர் உயிரிழப்பு
21 ஆவணி 2023 திங்கள் 03:13 | பார்வைகள் : 8735
வவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான தங்கராசா பிரதீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
பூந்தோட்டம் சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஒருவர் மீது இருவர் இணைந்து தாக்குதல் நடாத்தி இருந்தனர்.
அதில் படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
அவருடன் இணைந்து தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan