இலங்கையில் திவ்யபாரதி...
13 வைகாசி 2024 திங்கள் 06:23 | பார்வைகள் : 5751
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான திவ்யபாரதி இலங்கையில் எடுத்திருக்கும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி. இவர் 'மதில் மேல் காதல்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். ‘பேச்சுலர்’ படத்தில் ஜி.வி.பிரகாசுடன், அவர் கிளாமராக நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஜிவி பிரகாஷ் உடன் முத்தக்காட்சிகளிலும் நெருக்கமாக நடித்திருந்தார்.
இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள். தற்போது திவ்யபாரதி இலங்கையில் பொழுதை கழித்து வருகிறார். அங்கு கவர்ச்சி உடை அணிந்து விதவிதமாக புகைப்படம் எடுத்திருக்கிறார். அவற்றை தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. திவ்ய பாரதியின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை தேவதை, அழகு டார்லிங் என தங்கள் விருப்பத்துக்கு வர்ணித்து வருகிறார்கள். திவ்யபாரதி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'கிங்ஸ்டன்' படத்தில் நடித்து வருகிறார். இதிலும் இருவருக்குமான நெருக்கமான காட்சிகள் அதிகம் இருக்கும் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan