அமெரிக்காவில் பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சை - முதல் பயனாளி மரணம்
12 வைகாசி 2024 ஞாயிறு 09:18 | பார்வைகள் : 10994
அமெரிக்காவில் (America) மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையின் முதல் பயனாளி சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரது குடும்பத்தினரும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை வைத்தியர்களும் 11.05-2024 இல் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்க மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் 62 வயதான ரிச்சர்ட் ரிக் ஸ்லேமேன் (Richard Rick Slayman) என்பவருக்கே கடந்த மார்ச் மாதம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பன்றி சிறுநீரகம் குறைந்தது இரண்டு ஆண்டுகள் செயற்படும் என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எனினும், மாற்று அறுவை சிகிச்சையின் விளைவாக அவர் இறந்ததற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என்று நிபுணர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அமெரிக்காவில் 100,000இற்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தேசிய காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
இவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் தவணை வருவதற்கு முன்பே இறந்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan