தென்னாப்பிரிக்காவில் 5 நாட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நபர்

12 வைகாசி 2024 ஞாயிறு 09:04 | பார்வைகள் : 5828
தென்னாப்பிரிக்காவின் ஜார்ஜ் நகரில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் இருந்து ஐந்து நாட்கள் சிக்கி இருந்த ஒரு மனிதர் அதிசயமாக மீட்கப்பட்டார்.
இந்த மீட்பு பணியை அதிகாரிகள் "அதிசயம்" என்று விவரித்தனர். இந்த பேரிடர் தளத்தில் தொடரும் தேடுதல் பணிகளுக்கு இடையே இது ஒரு நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக அமைந்தது.
கட்டுமான பணியில் இருந்த ஐந்து மாடி கட்டிடம் திங்கட்கிழமை அன்று இடிந்து விழுந்ததில், பெரும் சேதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு 81 பேர் இருந்ததாக தகவல், இடிபாடுகளில் சிக்கி குறைந்தது 13 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடந்தது.
இந்த இடிபாடுகளில் சிக்கிய 29 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர், 39 பேர்களின் நிலை இன்னும் தெரியவில்லை.
மீட்பு குழுவினர் 116 மணி நேரங்களுக்கு மேலாக cranes மற்றும் drills ஆகியவற்றைப் பயன்படுத்தி இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பணியாற்றினர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025