பரிஸ் : சூட்கேஸ் ஒன்றில் மனித சடலம்! - தீவிர விசாரணை!
12 வைகாசி 2024 ஞாயிறு 07:29 | பார்வைகள் : 9230
சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில், துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வட்டாரத்தின் Pont d'Austerlitz பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள குப்பைத்தொட்டி ஒன்றி எரியூட்டப்பட்டதாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அப்போது குப்பைத்தொட்டி தீப்பிடித்தமைக்குரிய காரணம் குறித்து ஆராய்ந்த போது உள்ளே ஒரு சூட்கேஸ் பெட்டிக்குள் மனித உடல் கழிவுகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
உடனடியாக தீயணைப்பு படையினர், காவல்துறையினரை அழைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
தடயவியல் நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan