Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

12 வைகாசி 2024 ஞாயிறு 04:37 | பார்வைகள் : 5633


ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் 11-05-2024 காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது, ஹொக்கைடோவில் 32.2 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.17 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஹொக்கைடோவில் ஒருசில பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்