Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

■ Eurovision 2024 : நான்காவது இடத்தை பெற்ற பிரான்ஸ்!!

■ Eurovision 2024 : நான்காவது இடத்தை பெற்ற பிரான்ஸ்!!

12 வைகாசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 11560


'Eurovision 2024' பாடல் போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பாடகர் Nemo வெற்றி பெற்றுள்ளார். 1977 ஆம் ஆண்டின் பின்னர் பிரான்ஸ் இதுவரை இந்த பாடல் போட்டியில் வெற்றிபெறவில்லை.

2024 ஆம் ஆண்டின் போட்டியில் பிரான்ஸ் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பாடகரும் பாடலாசிரியருமான Slimane மெட்டமைத்து பாடிய பாடலுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. 'Mon amour' என தொடங்கும் அந்த பாடலுக்கு பலத்த வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்த போட்டியில் இரண்டாவது இடம் Baby Lasagna எனும் குரோஷியாவைச் சேர்ந்த பாடகருக்கு கிடைத்தது. அதேபோல் மூன்றாவது இடம், Alyona Alyona மற்றும் Jerry Heil ஆகிய இரு உக்ரேனிய பாடகிகளுக்கும் கிடைத்தது.

நேற்று, மே 11 சனிக்கிழமை இரவு இந்த பாடல் போட்டியின் இறுதிப்போட்டி ஸ்வீடனில் உள்ள Malmö Arena எனும் அரங்கில் மிக பிரம்மாண்டமாக இடம்பெற்றிருந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்