Aulnay-sous-Bois : மதுபோதையில் பேருந்தைச் செலுத்திய சாரதி கைது!
11 வைகாசி 2024 சனி 15:43 | பார்வைகள் : 10876
மதுபோதையில் பேருந்தைச் செலுத்தி, விபத்தை ஏற்டுத்த முற்பட்ட சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மே 10, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் பேருந்து இலக்கம் 613 இல் பயணித்த பயணிகள் சிலர் காவல்துறையினரை அழைத்துள்ளர். பேருந்தைச் செலுத்திய சாரதி மிகவும் வேகமாகவும், நிதானமற்றும் செலுத்தியதாகவும், விபத்து ஒன்றை ஏற்படுத்த முற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து பேருந்து இடைநிறுத்திய காவல்துறையினர், சாரதியை சோதனையிட்டுள்ளனர். அதன்போது சாரது மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது இரத்தத்தில் 2.72 கிராம் அளவில் மது கலந்திருந்ததை உறுதி செய்துள்ளனர்.(குறித்த அளவானது மிகவும் ஆபத்தான நிலையாகும்)
பின்னர் மாற்று சாரதியுடன் பேருந்து இயக்கப்பட்டது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan