ரஷ்யாவில் பயணிகள் பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்து விபத்து
11 வைகாசி 2024 சனி 13:48 | பார்வைகள் : 8024
ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் பாலத்திலிருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
மொய்கா ஆற்றின் மேம்பாலத்தில் பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்தில் மொத்தம் 20 பேர் பயணித்த நிலையில் அதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் மூழ்கிய பஸ்ஸில் இருந்து 12 பேரை அவசர உதவியாளர்கள் மீட்டுள்ளனர். மீட்பு பணி முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்து விபத்தில் சிக்கிய காணொளி காண்பவர்களை பதற வைத்துள்ளது.
மேலும், இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan