உக்ரைனுக்கு மீண்டும் ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா
11 வைகாசி 2024 சனி 13:44 | பார்வைகள் : 9177
உக்ரைனுக்கு மேலும் 400 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதில் ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உள்பட அதிநவீன ஆயுதங்களும் அடக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ரஷியாவுடனான போர் தொடங்கியது முதல் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத உதவி 50.6 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
அதேவேளை உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 806 நாளாக நீடித்து வரும் நிலையில் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan