கனடாவில் மார்பகப்புற்று நோய் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

11 வைகாசி 2024 சனி 07:25 | பார்வைகள் : 8341
கனடாவில் மார்பகப் புற்று நோய் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் அனைத்து மாகாணங்களும் பிராந்தியங்களும் மார்கப் புற்று நோய் குறித்த பரிசோதனைகளை 40 வயதிலிருந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனடிய புற்று நோய் அமைப்பு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. சில மாகாணங்களில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடமிருந்து மமாகிராம்ஸ் பரிசோதனை நடத்தப்படுகின்றன.
தற்பொழுது அநேகமான பகுதியில் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் மார்கப் புற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் மார்கப் புற்று நோய் பரிசோதனை செய்து கொள்ள சமசந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அடையாளம் காணுவதன் மூலம் எளிமையான வழிகளில் சிகிச்சை அளிக்கப்பட முடியும் என புற்று நோய் அமைப்பு அறிவித்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025