யாழில் பொலிஸ் துரத்தியதில் நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு மரணம்

10 வைகாசி 2024 வெள்ளி 17:15 | பார்வைகள் : 5960
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்துள்ளார்.
பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை இடை மறித்துள்ளனர். எனினும் அவர் நிறுத்தாது பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபர் பயணித்த மோட்டார் வண்டியை உதைந்து விழுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மேட்டார் சைக்களில் பயணித்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025