கிறிப்டோ கரன்சி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை
10 வைகாசி 2024 வெள்ளி 13:06 | பார்வைகள் : 6626
இலங்கையில் கிறிப்டோ கரன்சி (crypto currency) எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
நாட்டில் கிறிப்டோ நாணயம் வெகுவாக பயன்படுத்தப்படுவதில்லை எனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிறிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த சிலர் நட்டமடைந்துள்ளதாகவும் இவ்வாறான முதலீடுகளின் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இலங்கையில் கிறிப்டோ நாணய அலகினை பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan