Paristamil Navigation Paristamil advert login

புதிய சீருடையை அறிமுகம் செய்யும் PSG கழகம்..!

புதிய சீருடையை அறிமுகம் செய்யும் PSG கழகம்..!

10 வைகாசி 2024 வெள்ளி 09:02 | பார்வைகள் : 10604


PSG கழகம், இந்த 2024-2025 ஆம் பருவகாலத்துக்கான சீருடையை அறிமுகம் செய்ய உள்ளது. 

நீல நிற சீருடையின் முன் பக்கத்தில் அகலமான சிவப்பு நிற கோடும், அதன் இரு பக்கங்களிலும் இரு வெள்ளைக் கோடுகளும் கொண்டதாக இந்த சீருடை நாளை மே 11, சனிக்கிழமை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நாளை Parc des Princes அரங்கில் Paris FC அணிக்கு எதிராக PSG கழகம் விளையாட உள்ளது. அதன்போது இந்த புதிய சீருடையை அணிந்து PSG வீரர்கள் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் அடுத்த வருடம் முழுவதும் இதே சீருடையினையே அணிந்து கழக வீரர்கள் விளையாடுவார்கள் எனவும், PSG மகளிர் அணிக்கும் இதே வடிவிலான சீருடையே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்