ரஷ்ய - உக்ரைன் போரில் உயிரிழந்த 6 இலங்கையர்கள்

10 வைகாசி 2024 வெள்ளி 04:08 | பார்வைகள் : 4452
மனித கடத்தல்காரர்களால் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரிகள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டமை குறிப்படத்தக்கது.