இஸ்ரேலிய தூதரகங்கள் மீது பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான் தளபதி
8 சித்திரை 2024 திங்கள் 09:27 | பார்வைகள் : 12557
டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இனி இஸ்ரேலிய தூதரகங்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என ஈரானின் மூத்த தளபதி ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
தலைநகர் தெஹ்ரானில் பேசிய மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம் சஃபாவி, உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்கு இனி பாதுகாப்பு என்பதே இருக்கப் போவதில்லை என்றார்.
ஈரானின் பதிலடிக்கு பயந்து இதுவரை உலகெங்கும் 27 இஸ்ரேலிய தூதரகங்கள் மூடப்பட்டுள்ளது.
சிரியா தலைநகரில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் ஈரான் துணைத் தூதரகம் சேதமடைந்துள்ளதுடன் ஈரானின் IRGC உறுப்பினர்கள் 7 பேர்கள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, பதிலடி உறுதி என்றே ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இதில் ஜாஹிதி என்ற மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளது, ஈரான் ராணுவத்தை கொதிப்படைய வைத்துள்ளது.
2020ல் ஈராக்கில் குத்ஸ் படைத் தலைவர் காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதிலிருந்து, ஈரான் ராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாக தளபதி ஜாஹிதியின் கொலையை கருதுகின்றனர்.
சனிக்கிழமை இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்ட முதன்மையான தலைவர்கள் பலர், பதிலடி உறுதி என்றும், பேரிழப்பாக இருக்கும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan