அழிய கூடிய அபாயத்தில் ஆப்பிரிக்க பென்குயின்கள்
13 ஆவணி 2023 ஞாயிறு 10:39 | பார்வைகள் : 11228
ஆப்பிரிக்க பென்குயின்கள் அழிய கூடிய அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்காவிடின் 2035ம் ஆண்டுக்குள் அழிந்து விடக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் மத்தி, நெத்திலி போன்ற மீன்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட பகுதியில் குறைந்து வருவதாகக் கூறப்படுகின்றது.
இதனால் பென்குயின்கள் உணவுக்காகப் போராடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பறவைகள் நோய், புயல், வெள்ளம் மற்றும் மாசுபாட்டினை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அரசாங்கம் எண்ணெய் மற்றும் கப்பல் நிறுவனங்கள், விஞ்ஞானிகள் இணைந்து செயல்பட்டால் ஆப்பிரிக்க பென்குயின்களைக் காப்பாற்ற முடியும் என தி கார்டியன் இதழ் தெரிவித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan