விராட் கோலியின் New Hair Cut -க்கு எவ்வளவு செலவானது தெரியுமா...?
 
                    8 சித்திரை 2024 திங்கள் 07:17 | பார்வைகள் : 5912
விராட் கோலியின் நியூ ஹேர் ஸ்டைல் -க்கு அவரது சிகையலங்கார நிபுணர் (hairdresser) வசூலித்த தொகை தொடர்பான விவரங்கள் வெளிவந்துள்ளது.
பொதுவாகவே திரை பிரபலமாக இருந்தாலும் சரி, கிரிக்கெட் நட்சத்திரங்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய ஆடைகளையும், ஹேர் ஸ்டைலையும் ரசிகர்கள் பின்பற்றுவார்கள். சில சமயம் ட்ரெண்டாகவே மாறியிருக்கிறது.
அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ஹேர் ஸ்டைல் குறித்து பேசப்பட்டு வருகிறது. இதற்கு பிரபல சிகையலங்கார நிபுணர் ஹக்கீம் (hairdresser Aalim Hakim) எவ்வளவு ரூபாய் வாங்கினார் என்று தெரியவந்துள்ளது. இவர் தோனிக்கும் hairdresser என்பது குறிப்பிடத்தக்கது.
IPL தொடருக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியின் ஹேர் ஸ்டைல் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிரபல சிகையலங்கார நிபுணர் ஹக்கீம் கூறுகையில், "நான் ஹேர் கட்டுக்கு எவ்வளவு ரூபாய் வரை வசூலிக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், நான் விராட் கோலிக்கு எவ்வளவு ரூபாய் வாங்கினேன் என்பது தெரியாது.
நான் ஹேர் கட் செய்வதற்கு வசூலிக்கும் குறைந்தபட்ச தொகை 1 லட்சம் ரூபாய். விராட் கோலி மற்றும் எம்.எஸ்.தோனி ஆகிய இருவரும் என்னுடைய பழைய நண்பர்கள். அவர்கள் என்னிடம் தான் ஹேர் கட் செய்து வருகிறார்கள்.
இப்போது ஐபிஎல் தொடங்கியுள்ளதால் வித்தியாசமாக ட்ரை பண்ண வேண்டும் என்று நினைத்தோம்.
விராட் கோலியும் இந்த முறை இப்படி செய்யலாம், அடுத்த முறை இப்படி செய்யலாம் என்று பேசுவார்.
அதன்படி, IPL 2024 க்காக விராட் கோலிக்கு வித்தியசமான சூப்பர் லுக்கை கொடுக்க முடிவு செய்து அவரது புருவத்தின் ஒரு லேசான கட் ஒன்றை வைத்து, சைடுகளை பேட் (Fade )செய்தோம். அவரது முடிக்கு கலரிங் பின்பக்கத்தில் முள்ளெட் டெக்ஸ்சர் கொடுத்தோம்.
அவரது இந்த ஹேர் ஸ்டைல் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தும் நல்ல வரவேற்பு இருந்தது. ஸ்டைல், பேஷன் என்று வந்துவிட்டால் விராட் கோலி நம்பர் ஒன். அதேபோல தோனியை பொறுத்தவரை அவர் பாலிவுட் நடிகர்களுக்கு குறைந்தவரில்லை" என்றார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan