இலங்கையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

7 சித்திரை 2024 ஞாயிறு 12:21 | பார்வைகள் : 6949
மாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் தகராறொன்றை தீர்க்கச் சென்ற போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்தார்.
நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனெல்லை பதியதொர பிரதேசத்தில் தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதன்படி பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இதன்போது தகராறில் ஈடுபட்ட நபர் ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, மற்றுமொரு பொலிஸ் அதிகாரி வானத்தை நோக்கிச் சுட்டதாகவும், பின்னர் குறித்த நபர் அந்த பொலிஸ் அதிகாரியையும் தாக்க முற்பட்ட போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலை நடத்த வந்த நபரின் தந்தை இலக்காகி மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1