இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி
7 சித்திரை 2024 ஞாயிறு 11:15 | பார்வைகள் : 1173
ஹாமில்டனில் மகளிர் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 46.3 ஓவரில் 194 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக ஏமி ஜோன்ஸ் 50 (52) ஓட்டங்களும், சார்லி டீன் 38 (64) ஓட்டங்களும், ஹீதர் நைட் 31 (50) ஓட்டங்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர் மற்றும் ஹன்னா ரோவ் தலா 3 விக்கெட்டுகளும், அமெலியா கெர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் சுஸி பேட்ஸ் (6), ஜார்ஜியா ப்லிம்மர் (4) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த அமெலியா கெர் 60 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து எக்லெஸ்ஸ்டோன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து அணித்தலைவர் சோபி டிவைன் மற்றும் மேடி கிரீன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இவர்களின் அபார ஆட்டத்தினால் 39வது ஓவரிலியே நியூசிலாந்து அணி இலக்கை நெருங்கியது.
வெற்றிக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது, சோபி டிவைனின் சதத்திற்கும் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
சார்லி டீன் வீசிய கடைசி பந்தை டிவைன் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதன்மூலம் அவர் சதத்தை எட்டியதுடன், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஏற்கனவே இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றிருந்த நிலையில், நியூசிலாந்துக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.