‛உடன்பிறப்பே' இரண்டாம் பாகம் உருவாகிறதா?

7 சித்திரை 2024 ஞாயிறு 09:13 | பார்வைகள் : 6134
ஜோதிகாவுக்கும் இரண்டாம் பாக ஆசை வந்து விட்டதாக கூறப்படுகிறது ஜோதிகா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’உடன்பிறப்பு’. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ஜோதிகாவின் அண்ணனாக சசிகுமார், கணவராக சமுத்திரக்கனி நடித்திருந்தார்கள். இந்த படம் பிசி சென்டர்களில் நல்ல வரவேற்பு பெற்றது.
இயக்குனர் ரா சரவணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஆலோசனை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ’உடன்பிறப்பே 2’ கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ரா சரவணனுக்கு ஒரு பெரிய தொகை அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஜோதிகா நடிக்கும்’உடன்பிறப்பே 2’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திலும் அண்ணன் தங்கை சென்டிமென்ட், எமோஷனல் காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் இந்த படம் ஜோதிகாவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1