இலங்கை அரச பணியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

7 சித்திரை 2024 ஞாயிறு 08:57 | பார்வைகள் : 5065
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறைக்கு அமைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி சபையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அக்காலப்பகுதியில் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த காலகட்டத்தில், அனர்த்தம் மற்றும் அவசர அத்தியாவசியப் பணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை இவ் விடுமுறைக் காலத்தில் இடையூறு இன்றி பராமரிக்கும் வகையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1