கோட்’ என்ற திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் நடிகை யார்?
6 சித்திரை 2024 சனி 15:49 | பார்வைகள் : 6465
தளபதி விஜய் தற்போது ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள வரும் நிலையில் அடுத்ததாக அவர் ’தளபதி 69’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படம் தான் அவருடைய கடைசி படம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் எச் வினோத் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி ஆக நடிக்க நான்கு பிரபல நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
பிரபல பாலிவுட் நடிகைகளான ஆலியா பட், மிருணாள் தாக்கூர் மற்றும் தென்னிந்திய நடிகைகளான த்ரிஷா மற்றும் சமந்தா ஆகியோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நான்கு நடிகைகளுமே 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதால் இவர்களில் யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தளபதி விஜய்க்கு இந்த படத்திற்காக 250 கோடி சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அனிருத் இசையில் உருவாகயிருக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அப்போது இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் நடிகை யார் இந்த குறித்து தெரியவரும் என்பதையும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan