Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் - ரஷ்யா போரின் தற்போதைய நிலை

உக்ரைன் - ரஷ்யா போரின் தற்போதைய நிலை

13 ஆவணி 2023 ஞாயிறு 09:19 | பார்வைகள் : 9937


உக்ரைன் ரஷ்ய போர் பல மாதங்களை கடந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் சமீப நாட்களாக உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா, கிரிமியா தீபகற்பம் அருகே இருந்த 20 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

14 ஆளில்லா விமானங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளாலும், 6 எலக்ட்ரானிக் போர்களாலும் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இடம்பெற்றுள்ள விமான தாக்குதலால் எவ்வித உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும்,மாஸ்கோவிற்கு தென்மேற்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலுகா பகுதியிலும் ஒரு ஆளில்லா விமானம் இடைமறிக்கப்பட்டதாக ஆளுநர் விளாடிஸ்லாவ் ஷப்ஷா தெரிவித்துள்ளார்.  

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்