குஜராத்தில் பாரம்பரிய முறைப்படி அமலாபால் வளைகாப்பு...

5 சித்திரை 2024 வெள்ளி 13:22 | பார்வைகள் : 6395
நடிகை அமலாபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலாபால் என்பதும் அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் இவர் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடக்க அமலாபால், தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் என்பதும் அவ்வப்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்தார் என்பதையும் தெரிந்தது.
இந்த நிலையில் நடிகை அமலாபாலுக்கு தற்போது வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தயாராகும் வீடியோ ஒன்றை நேற்று பதிவு செய்திருந்த நிலையில் தற்போது வளைகாப்பு நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் நடிகை அமலா பால் வெளியிட்டுள்ளார்.
அமலாபால் மற்றும் அவரது கணவர் தேசாய் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பல திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025