Paristamil Navigation Paristamil advert login

ஒவ்வொரு மாதமும் €20,000 யூரோக்கள் பணம்! - அதிஷ்ட்டம் அள்ளித்தந்த Eurodreams!!

ஒவ்வொரு மாதமும் €20,000 யூரோக்கள் பணம்! - அதிஷ்ட்டம் அள்ளித்தந்த Eurodreams!!

5 சித்திரை 2024 வெள்ளி 06:35 | பார்வைகள் : 13494


ஒவ்வொரு மாதமும் €20,000 யூரோக்கள் வழங்கும் அதிஷ்ட்டலாபச் சீட்டினை பிரெஞ்சு நபர் ஒருவர் வென்றுள்ளார்.

நேற்று ஏப்ரல் 4, வியாழக்கிழமை இந்த அதிஷ்ட்டம் வெல்லப்பட்டுள்ளது. FDJ நிறுவனம் ஆரம்பித்திருந்த இந்த Eurodreams எனும் இந்த அதிஷ்ட்டலாபச் சீட்டினை பிரெஞ்சு நபர் ஒருவர் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்துவரும் 30 ஆண்டுகளுக்கு மாதம் €20,000 யூரோக்கள் வீதம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட உள்ளது. மொத்தமாக அவர் தனது வாழ்நாளில் €7,200,000 யூரோக்கள் தொகையை பெற உள்ளார்.

9-10-12-14-20-31 ஆகிய இலக்கங்களும்,   numéro Dream என சொல்லப்படுகிற ஒற்றை அதிஷ்ட எண் '5' ம் கொண்ட சீட்டுக்கே இந்த வெற்றித்தொகை வழங்கப்பட உள்ளது.

வெற்றியாளரின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. 

அதேவேளை, முதல் ஐந்து இலக்கங்களையும் சரியாக யூகித்த 56 பேருக்கு மாதம் €104 யூரோக்கள் வீதம் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்