Paristamil Navigation Paristamil advert login

தில் ராஜூ தயாரிப்பில் தனுஷ்?

தில் ராஜூ தயாரிப்பில் தனுஷ்?

4 சித்திரை 2024 வியாழன் 15:23 | பார்வைகள் : 715


தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களைக் தயாரித்து வருகிறார். கடந்தாண்டு முதல் முறையாக தமிழில் நடிகர் விஜய்யை வைத்து 'வாரிசு' என்கிற படத்தை தயாரித்தார். தற்போது விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிப்பில் ‛தி பேமிலி ஸ்டார்' என்ற படத்தை எடுத்துள்ளார்.

நாளை தெலுங்கு மற்றும் தமிழில் இந்தப்படம் வெளியாகிறது. இந்நிலையில் வாரிசு படத்திற்கு பின் மீண்டும் ஒரு தமிழ் படத்தை எடுக்க எண்ணி உள்ளார் தில் ராஜூ. இதில் நடிகர் தனுஷை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்