Paristamil Navigation Paristamil advert login

தொகுப்பாளர் ஆகிறார் ஆரி..

தொகுப்பாளர் ஆகிறார்  ஆரி..

4 சித்திரை 2024 வியாழன் 14:37 | பார்வைகள் : 12496


பிரபல இயக்குனர் கரு பழனியப்பன், ஜீ தமிழ் சேனலில் ’தமிழா தமிழா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பதும், இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்பது தெரிந்தது.

ஆனால் ஜீ தமிழ் சேனலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகியதாக கூறப்பட்ட நிலையில் அதனை அடுத்து அவர் கலைஞர் டிவியில் ’வா தமிழா வா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்க இருக்கும் நிலையில் அதில் பிக் பாஸ் ஆரி தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ஆரிக்கு மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களின் ஆதரவு கிடைத்தது என்பதும் அதனை அடுத்து அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டு, அதன்பின் சில படங்களிலும் அவர் நடித்துக் கொண்டார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது அவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ’வா தமிழா வா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள நிலையில் கரு பழனியப்பனை விட அவர் சிறப்பாக செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் இந்த ’வா தமிழா வா’ நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ள கரு பழனியப்பன் ’தனக்கும் சேனல் நிர்வாகத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் தான் இந்த நிகழ்ச்சிகளில் இருந்து விலகினேன் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்