Paristamil Navigation Paristamil advert login

‘விடாமுயற்சி ஹாலிவுட் படத்தின் காப்பியா ’...?

‘விடாமுயற்சி ஹாலிவுட் படத்தின் காப்பியா ’...?

4 சித்திரை 2024 வியாழன் 14:35 | பார்வைகள் : 7138


நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து ஒரு ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்ட விதம் குறித்தான எக்ஸ்க்ளூசிவ் வீடியோவை படக்குழு இன்று மதியம் வெளியிட்டது. இந்தக் காட்சிகளைக் கொண்டு இது பிரபல ஹாலிவுட் படமான ‘பிரேக்டவுன்’ படத்தின் காப்பி என ரசிகர்கள் வீடியோவோடு வைரலாக்கி வருகின்றனர்.

ஆக்‌ஷன் காட்சிகள் செய்வதில் அதிக ஆர்வமுடையவர் நடிகர் அஜித். குறிப்பாக, தான் நடிக்கும் படங்களின் ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் செய்ய விரும்புவார். அப்படித்தான் ‘விடாமுயற்சி’ படத்திற்கும் டூப் இல்லாமல் கார் ஓட்டி விபத்துக்குள்ளாகும் காட்சியில் நடித்திருக்கிறார்.

இந்த விபத்துக் காட்சியின் போது அஜித் காரில் சிக்கினார். உடனிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டனர். ‘விடாமுயற்சி’ படத்திற்காக இப்படி அஜித் உயிரை பணயம் வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது. அஜித்தின் இந்த ரிஸ்க்கை ரசிகர்களும் பாராட்டினர்.

அதேசமயம், இந்தக் காட்சி ’பிரேக்டவுன்’ என்ற பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பி எனவும் வீடியோ ஆதாரத்தோடு இதை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.
’பிரேக்டவுன்’ படத்தின் இந்தக் காட்சியில் ஹீரோ, காணாமல் போன தனது மனைவி குறித்து வில்லனிடம் விசாரிப்பார். முதலில் வில்லன் ஹீரோவை கட்டிவைத்து சித்திரவதை செய்வார். பின்பு, ஹீரோ வில்லனை காரில் கட்டிவைத்து கிளம்புவார். அப்போதுதான் இந்த விபத்துக் காட்சி நடக்கும்.

அதேபோன்று தான் தற்போது வெளியாகியுள்ள இந்த ‘விடாமுயற்சி’ படக்காட்சியிலும் இருக்கிறது. இதை ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, “அப்படியானால் ‘பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக்தான் ‘விடாமுயற்சி’யா?” என விடாமல் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

”எந்தவொரு பெரிய ஹீரோவின் பட அப்டேட் வந்தாலும் அதை டீகோட் செய்து ‘ஹாலிவுட் படத்தின் காப்பி’ என்று ஒரு கும்பல் கிளம்பும். அதேபோலதான் இதுவும்” என அஜித்துக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர் தல ரசிகர்கள்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்