இன்று 30°C வெப்பம்!!
4 சித்திரை 2024 வியாழன் 07:49 | பார்வைகள் : 12025
இன்று ஏப்ரல் 4 ஆம் திகதி வியாழக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் 30°C வரை வெப்பம் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சஹாரா பாலைவன வெப்பம் பிரான்சை தாக்க உள்ளதாக Météo France எச்சரித்துள்ளது. Toulouse நகரில் 25°C வரையான வெப்பமும், Argelès-Gazost, Hautes-Pyrénées போன்ற பகுதிகளில் 26 °C வெப்பமும்,
Landes, Pyrénées-Atlantiques போன்ற நகரங்களில் அதிகபட்சமாக 30°C வெப்பமும் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பமானது ஏப்ரல் 20 முதல் மே 10 ஆம் திகதி வரையான நாட்களில் பதிவாகும் அதிகபட்ச வெப்பமாகும். இம்முறை வழமைக்கு மாறாக ஏப்ரல் மாத ஆரம்பத்திலேயே இதுபோன்ற அதிக வெப்பம் நிலவ உள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan