துருக்கியில் பயங்கர தீ விபத்து - 29 பேர் பலி
3 சித்திரை 2024 புதன் 08:51 | பார்வைகள் : 11877
துருக்கியில்இஸ்தான்புல்லில் உள்ள உயரமான கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள இரவு விடுதி ஒன்று மூடப்பட்டு பகலில் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இஸ்தான்புல் ஆளுநர் தாவுட் குல் தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீ விபத்தில் பலியானவர்கள் ஊழியர்கள் என்று கூறிய அவர், ஆனால் அவர்கள் ஒப்பந்தக்காரர்களா அல்லது இரவு விடுதியின் ஊழியர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார். விசாரணைகள் தொடர்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

























Bons Plans
Annuaire
Scan