Paristamil Navigation Paristamil advert login

ஆல்ப்ஸ் மலையில் விழுந்து ஹெலிகாப்டர் விபத்து 

ஆல்ப்ஸ் மலையில் விழுந்து ஹெலிகாப்டர் விபத்து 

3 சித்திரை 2024 புதன் 08:47 | பார்வைகள் : 7649


சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நான்கு சுற்றுலாப் பயணிகள், ஒரு வழிகாட்டி மற்றும் விமானியுடன் பயணித்த ஹெலிகாப்டர், உள்ளூர் நேரப்படி காலை 9.25 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை, 

விபத்தில் உயிரிழந்த மூவரும் சுற்றுலாப் பயணிகளா என்பது இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூன்று பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களின் காயங்களின் அளவு தெரியவில்லை என்றும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்