ஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதல் - 30 வருடச் சிறை!!
2 சித்திரை 2024 செவ்வாய் 20:05 | பார்வைகள் : 10413
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி ஸ்ரார்ஸ்பேர்க்கின் நத்தார் சந்தையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது
இந்தத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஊடகவியலாளர், உல்லாசப் பயணிகள் எனப் பலர் கொல்லப்பட்டனர்.
அல்லாஹ் அக்பர் என்ற கூச்சலுடன் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது.

இதன் முக்கிய சூத்திரதாரி ஷெரிப் செக்கத் தாக்குதல் களத்திலேயே காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்
இந்தத் தாக்குதலில் அடுத்த முக்கிய குற்றவாளியான ஓத்ரே மொன்தேஜிக்கு (Audray Mondjehi) இன்று 30 வருடச்சிறத்தண்டைனை வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய பயங்கரவாதியான ஷெரிப் செக்கதத்துடன், ஓத்ரே மொன்தேஜி ஓரே சிறையறையில், வேறு குற்றங்களிற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் என்றும், அங்கிருந்தே இந்த இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல் தயாரிக்கப்பட்டது என்றும், உள்ளகப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது

இத்தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இருவரிற்கு தலா ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan