Paristamil Navigation Paristamil advert login

வெற்றிமாறனின் அடுத்த படத்தின் அதிரடி அறிவிப்பு..

வெற்றிமாறனின் அடுத்த படத்தின் அதிரடி அறிவிப்பு..

2 சித்திரை 2024 செவ்வாய் 06:35 | பார்வைகள் : 5723


இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி நடித்து வரும் ’விடுதலை 2’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்த போஸ்டரும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான வெற்றிமாறன், திரைப்படங்களை இயக்குவது மட்டுமின்றி சில படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் அவரது தயாரிப்பில் தற்போது ’கருடன்’ என்ற படம் உருவாகி வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’மபொசி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்பதன் சுருக்கம் தான் ’மபொசி’ என்று போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை குணச்சித்திர நடிகரும், ’கன்னி மாடம் ’என்ற படத்தை இயக்கியவருமான போஸ் வெங்கட் இயக்க உள்ளார். இந்த படத்தின் நாயகனாக விமல் மற்றும் நாயகியாக சாயாதேவி நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்