ஹவாய் காட்டுதீ அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
.jpg)
12 ஆவணி 2023 சனி 09:46 | பார்வைகள் : 11479
ஹவாய் காட்டுதீ யில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹவாயில் காட்டுதீயினால் முற்றாக அழிவடைந்துபோன லகையினாவின் மக்கள் தங்கள் பகுதிகளிற்கு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் காணாத அழிவுகளை காணவேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கைக்கு மத்தியில் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளிற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
கடந்தவார தீ காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரம் முற்றாக அழிவடைந்துள்ளது.
இந்த சம்பவத்தால் தங்கள் ஆடைகளுடன் அந்த பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் தாங்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கவேண்டிய நிலையேற்படலாம் என கவலை வெளியிட்டுள்ளனர்.