Paristamil Navigation Paristamil advert login

ஜூன் வரை வெயில் வாட்டும் ஆய்வு மையம் எச்சரிக்கை

 ஜூன் வரை வெயில் வாட்டும் ஆய்வு மையம் எச்சரிக்கை

2 சித்திரை 2024 செவ்வாய் 02:36 | பார்வைகள் : 5656


இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா நேற்று கூறியதாவது:

நம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது.

குறிப்பாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப பகுதிகளில் சராசரி அளவை விட வெப்பம் அதிகரிக்கும்.

சமவெளிப்பகுதிகளில் அதிக அனல் காற்று வீசும். இதன் காரணமாக குஜராத், மத்திய மஹாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், ''லோக்சபா தேர்தல் நேரத்தில், வெப்பம் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை வந்துள்ளது. எனவே, இதை சமாளிக்க, முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுஉள்ளது,'' என்றார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்