40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்லவேண்டும் - சிங்கப்பூரின் அதிரடி முயற்சி
1 சித்திரை 2024 திங்கள் 10:55 | பார்வைகள் : 11626
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் பல்கலைக்கழகங்களுக்கு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் வருகையால் அனைத்துத் துறைகளிலும் புரட்சிகரமான மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
எனவே, அதற்கேற்ப குடிமக்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், சிங்கப்பூர் மீண்டும் தங்கள் நாட்டு மக்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகிறது.
இதற்காக முழுநேர டிப்ளமோ படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்புகளைப் படிக்க 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 90 சதவீத கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது.
தற்போது 40 வயதைத் தாண்டிய ஊழியர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்த படிப்புக்கும், தற்போதைய படிப்புக்கும் நிறைய மாற்றம் இருக்கும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற எம்.பி.யான டான் ஓ மெங் தெரிவித்தார்.
'அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்கள்.
வாழ்க்கைத் திறன்கள் வகுப்பறைக்குள் கொண்டுவரப்படுகின்றன.
"மேலும், அவர்கள் இளம் மாணவர்களுடன் சேர்ந்து புதிய திறன்களைக் கற்றுக்கொள்வார்கள்" என்று மெங் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan