லீக்ஸ் கோப்பை அரையிறுதியில் நுழைந்த இன்டர் மியாமி அணி
12 ஆவணி 2023 சனி 09:06 | பார்வைகள் : 7300
லீக்ஸ் கோப்பை காலிறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் சார்லோட் அணியை வீழ்த்தியது.
DRV PNK மைதானத்தில் நடந்த லீக்ஸ் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் இன்டர் மியாமி மற்றும் சார்லோட் அணிகள் மோதின.
ஆரம்பம் ஆதிக்கம் செலுத்தி இன்டர் மியாமி அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை வகித்தது.
ஜோசெஃப் மார்ட்டினெஸ் பெனால்டியில் (12வது நிமிடம்) ஒரு கோலும், 32வது நிமிடத்தில் ராபர்ட் டெய்லர் ஒரு கோலும் அடித்தனர்.
அதன் பின்னரான இரண்டாம் பாதியின் 78வது நிமிடத்தில், சார்லோட் அணியின் அடில்சன் மலண்டா சுயகோல் அடித்ததால் இன்டர் மியாமியின் கோல் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் மெஸ்ஸி தன்னிடம் வந்த பந்தை லாவகமாக நொடிப்பொழுதில் கோலாக மாற்றினார்.
கடைசி வரை சார்லோட் அணியால் கோல் அடிக்க முடியாததால் இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து 16ஆம் திகதி நடக்க உள்ள அரையிறுதியில் philadelphia அணியை இன்டர் மியாமி எதிர்கொள்கிறது.
மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக 5 போட்டிகளில் 8 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan