கரீபியன் படையினருக்கு இராணுவ பயிற்சி வழங்கும் கனடா
31 பங்குனி 2024 ஞாயிறு 12:36 | பார்வைகள் : 12247
கரீபியன் படையினருக்கு கனடா இராணுவம், பயிற்சிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயிற்சிகளை வழங்கும் நோக்கில் கனடிய படையினர் ஜமெய்க்காவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஹெய்ட்டியில் முன்னெடுக்கப்பட உள்ள அமைதி காக்கும் பணிகளில் கரீபியின் தீவுகள் படையினர் கூட்டாக இணைந்து கொண்டுள்ளனர்.
ஜமெய்க்காவின் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய கனடிய இராணுவப் படையினர் பயிற்சி வழங்கும் பணியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய படையினர் ஒரு மாத காலம் ஜமெய்க்காவில் தங்கியிருந்து பயிற்சிகளை வழங்க உள்ளனர்.
ஹெய்ட்டியில் மிக மோசமான வன்முறகைள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan