யாழில் தோட்ட கிணற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வயோதிபரின் சடலம்

31 பங்குனி 2024 ஞாயிறு 10:41 | பார்வைகள் : 9164
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (31) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை தவராசா (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்ட வயது முதிர்ந்த குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையிலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025