பிரபல தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஜோதிகா..

31 பங்குனி 2024 ஞாயிறு 09:35 | பார்வைகள் : 7433
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவை அடுத்து பிரபல தொழிலதிபர் ஒருவரின் பயோபிக் திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இதில் ஜோதிகா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் நிலையில் தற்போது பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பாக அவர் நடித்த ’சைத்தான்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட்டில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொழிலதிபர் ஸ்ரீகாந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் ராஜ்குமார் ராவ் என்பவர் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஜோதிகா நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு ஆரம்பத்தில் ‘ஸ்ரீ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் என்று டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. வரும் மே மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025