RER D தொடருந்தில் வைத்து சிறுமி மீது கத்திக்குத்து தாக்குதல்!
31 பங்குனி 2024 ஞாயிறு 06:16 | பார்வைகள் : 13261
RER D தொடருந்தில் வைத்து 16 வயதுடைய சிறுமி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
மார்ச் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இச்சம்பவம் Boussy-Saint-Antoine (Essonne) நகரில் உள்ள Saint-Antoine தொடருந்து நிலையத்தின் அருகே வைத்து பிற்பகல் 3.30 மணி அளவில் இடம்பெற்றது. 16 வயதுடைய சிறுமி ஒருவர் RER D தொடருந்தில் பயணித்த நிலையில், ஆயுததாரி ஒருவர் திடீரென கூரான கத்தி ஒன்றின் மூலம் சிறுமியை தாக்கியுள்ளார். விலா எலும்பிலும், பின்புறத்திலும் அவருக்கு வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது.
சக பயணிகள் அவசர அலாரத்தை இழுத்து தொடருந்தினை நிறுத்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாக்குதலாளி தப்பி ஓடியுள்ளார். அவர் தேடப்பட்டு வருகிறார்.
குறித்த சிறுமி மீட்கப்பட்டு பரிசில் உள்ள Salpêtrière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Combs-la-Ville-Quincy (Seine-et-Marne) தொடருந்து நிலையத்தில் வைத்து அவர் தொடருந்தில் ஏறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan