கடற்கரையில் கற்களை பொறுக்கினால் ரூ.2 லட்சம் அபராதம்...!

29 பங்குனி 2024 வெள்ளி 14:32 | பார்வைகள் : 8510
கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுரா கடற்கரைகளில் உள்ள கூழாங்கற்களை எடுத்து சென்றால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் இந்த கடற்கரைகளுக்கு நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வருகை தரும் பயணிகள் இந்த கடற்கரையில் உள்ள கூலாங்கற்களை அதிக அளவில் எடுத்து செல்கின்றனர்.
இதனால் அங்கு கடுமையான கூழாங்கல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் தீவின் அழகும், சுற்று சூழல் அமைப்பும் இதன் மூலம் பாதிக்கப்படுகிறது.
எனவே தான் கடற்கரையில் இருந்து கற்களை எடுத்து செல்லும் நபர்களுக்கு ரூ.13,478 முதல் ரூ.2.69 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025