தென்னாபிரிக்காவில் கோர விபத்து - 45 பேர் பலி!
29 பங்குனி 2024 வெள்ளி 06:05 | பார்வைகள் : 8783
தென்னாபிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ன பஸ் ஒன்று விபத்துக்குள்ளது.
இந்நிலையில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன்,ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து திணைக்களம் வியாழக்கிழமை 28 தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவில் போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகருக்கு தவக்கால யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் மாமட்லகலா மலைப்பாதையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டுமே உயிர் தப்பிய நிலையில், அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக லிம்போபோவின் போக்குவரத்து மற்றும் சமூக பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது.
சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதோடு, ஏனைய உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே சிதறிக்கிடந்துள்ளன.
இந்நிலையில், தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா போட்ஸ்வானாவில் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan