இலங்கையில் இருந்து பிரான்ஸ் வர தயாரானவர் கைது!

11 ஆவணி 2023 வெள்ளி 13:01 | பார்வைகள் : 13225
போலியான வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக பிரான்ஸ் வர முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று வியாழக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் மற்றும் அவரது ஆவணங்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025