இலங்கையில் தடுப்பு ஊசி செலுத்திய 10 மாணவர்கள் வைத்தியசாலையில்
29 பங்குனி 2024 வெள்ளி 03:42 | பார்வைகள் : 6781
களுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கப்பட்ட ஊசி மருந்து காரணமாக 12 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
அத்துடன் 7 மற்றும் 8 ஆம் தரங்களில் கல்வி கற்கும் அந்த வயதுப் பிரிவு மாணவர்களுக்கு 280 தடுப்பூசிகள் போடப்பட்டது.
அதன் பிறகு குழந்தைகள் மயக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் வெளிபடுத்தப்பட்ட நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan