இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அதிரடி அறிவிப்பு..!
28 பங்குனி 2024 வியாழன் 12:47 | பார்வைகள் : 11968
நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் ’சூர்யா 44’ படமாக உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ள நிலையில் தற்போது இணையத்தில் இது குறித்த போஸ்டர் வைரலாகி வருகிறது.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவருடைய 44வது படத்தை நான் இயக்குகிறேன் என மாஸ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
’கங்குவா’ படத்திற்கு பிறகு சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ’புறநானூறு’ என்ற படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த படம் தாமதம் ஆகும் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. அதேபோல் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் பிஸியாக வெற்றிமாறன் இருப்பதால் ’வாடிவாசல்’ திரைப்படமும் கால தாமதம் ஆகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சூரியா அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan